ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பேச்சுவார்த்தைக்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தபடுமானால் அதற்கு எமது தரப்பும் தயாராகவுள்ளது.

அனைவரது கருத்துக்களையும் இணைத்து கொண்டு பயணிப்பது அவசியமாகவுள்ளது.

எனவே, இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியிடம் கருத்துகள் மற்றும் தீர்மானங்கள் காணப்படுமாயின் நாம் அதனை சிறந்த ஒரு விடயமாக நோக்குகின்றோம்.

அத்துடன் பொறுப்புக்களை வழங்குதல் மற்றும் எதிர்காலம் குறித்து கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியும்.

எனினும் வேறு அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட கூடாத எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்கும், தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காகவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இன்று பிற்பகல் கட்சித் தலைமையகத்தில் கலந்துரையாட உள்ளனர்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.