இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுதியான மூன்று பேர் அடையாளம் காணப்படுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் சேனாபுர புனர்வாழ்வு மையத்திலுள்ள இருவருக்கும் இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியான மேலும் 3 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 579 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில் கொவிட்-19 தொற்றுறுதியான 254 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.