நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஓமானில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 4 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறினர்.

தேசிய தொற்று நோய் தடுப்பு இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட் 19 தொற்றுறுதியான 212 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள வியாபாரிகள், பொருட்கள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 100இற்கும் மேற்பட்டவர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இராஜாங்களை பகுதியில் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்தே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.