இலங்கையில் சமூகமட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மற்றுமொரு கொரோனா நோயாளி


இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிய கொரோனா நோயாளிகள் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்டவர்களில் 7 பேர் ஐக்கிய அரபு எமிரகத்தில் இருந்து நாட்டுக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மற்ற நபர் பொலநறுவை, லங்காபுர பிரதேச செயலக அலுவலகத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நபர் என கூறப்படுகின்றது.

இதுவரையில் அவர்களுக்கு அருகில் இருந்தர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடந்த பல மாதங்களாக சமூக மட்டத்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணாத நிலையில், லங்காபுர பகுதியில் 3 பேர் சமூக மட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.