கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது செய்தி...

இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். தோனி ஆகஸ்ட் 15 இரவு 7.29 மணிக்கு ஓய்வை அறிவித்தார்.

அந்த ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், ரெய்னாவின் ஓய்வு அறிவிப்பு வெளியானது.

இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முழு மன நிறைவுடன் தோனி வழியை தேர்ந்தெடுப்பதாக இந்திய அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா 226 ஒருநாள் போட்டிகள், 78 டி20 மற்றும் 19 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

226 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 5617 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

ரெய்னாவுக்கு தற்போது 33 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வீரர்கள் தல தோனி மற்றும் சின்ன தல சுரேஷ் ரெய்னா இருவரும் வெளியிட்டுள்ள இந்த ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.