நாடு முழுவதும் மின்சார விநியோகம் துண்டிப்பு- காரணம் இதோ..!


மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வத்தளை-கெரவலபிட்டி பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே இவ்வாறு மின் துண்டிப்பு மேற்கொள்ள நேர்ந்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சாரம் வழமைக்கு திரும்புவதற்கு சுமார் 2 மணிநேரம் வரையில் தேவைப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது குறித்த மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.