நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2666 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2858 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், நேற்றைய தினம் 4 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 3 பேருக்கும், ஜப்பானில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 886 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேபோல், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்தவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 209 ஆக காணப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றால் எற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன், ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.