நாட்டு மக்களின் நன்மைக்காக ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவு

அரச மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவைகளில் பயணிகள் நிம்மதியாகவும், விரைவாகவும் பயணம் செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதபப்டுத்துங்கள். இலங்கை போக்குவரத்து சபை பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கினால் ஏன் நட்டமடைகிறது.

வாகன நெரிசலை குறைப்பதற்கான புதிய திட்டங்களை போக்குவரத்து அமைச்சு தயாரித்து அதனை துரிதமாக செயற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போக்குவரத்து அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மிகச் சிறியதோர் ஆரம்பத்திலிருந்து பெரிய மாற்றத்தினை செய்ய முடியும். பஸ் வண்டிகளை கழுவி சுத்தம் செய்து பிரயாணிகளுக்கு பயணிப்பதற்கான ஒழுங்குகளை நாளைய தினமே ஆரம்பியுங்கள்.

சுவரொட்டிகளை ஒட்டுவதை நிறுத்துவதற்கு மேற்கொண்ட சிறியதொரு தீர்மானம் நாட்டின் அனைத்து நகரங்களையும் சுத்தமாக வைத்திருப்பதற்கு வழிவகுத்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அனைத்து துறைகளினதும் அபிவிருத்தியை மிகச் சிறிய இடத்திலிருந்து ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் போக்குவரத்து அமைச்சர் மற்றும் புகையிரத பெட்டிகள் , மோட்டார் வாகன உற்பத்தி இராஜாங்க அமைச்சர் மற்றும் போக்குவரத்து சேவை அதிகாரிகளுடனான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.

போக்குவரத்து துறையை மேம்படுத்தல் தொடர்பில் அமைச்சர், இராஜாங்க அமைச்சரிடம் வினவி அவர்களுக்கு ஆலோசனை வழங்குகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மோட்டார் வாகனத்தில் வந்து அதனை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு பேருந்து ஊடாக சேவை நிலையங்களுக்கு செல்லும் தரித்தல் - பயணம் முறைமையை உடனடியாக செயற்படுத்த வேண்டும்.

இதனால் வாகன நெரிசல் எதிர்பார்க்கும் அளவிற்கு குறைவடையும். இலங்கை போக்குவரத்து சேவை பயணிகளுக்கு சிறந்த சேவையினை வழங்கினால் அந்நிறுவணம் ஒருபோதும் நட்டமடையாது.

கிராமிய புறங்களில் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகளை தேவைக்கேற்ப சேவையில் ஈடுப்படுத்துவதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.