கன்னி அமர்வு இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பம்

9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

நிலையியல் கட்டளைகளுக்கு அமைய, முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும்.

அதையடுத்து, புதிய சபாநாயகர் முன்னிலையில், பொதுத் தேர்தலில் தெரிவான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதிப்பிரமாணம் ஏற்கவுள்ளனர்.

பின்னர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதி தலைவர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டவுள்ளனர்.

9ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஆளும் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தனவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியயை நியமிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறை நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாக 81 தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 12 பேர் பெண் பிரதிநிதிகளும் அடங்குகின்றனர்.

இதேநேரம், இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்த உள்ளார்.

9 ஆவது நாடாளுமன்றம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தை அங்குரார்ப்பணம் செய்வதற்கு ஜனாதிபதி பிரவேசிக்கும்போது, மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, வாகன அணிவகுப்பு இடம்பெறும்.

ஆனால், இந்த முறை அவ்வாறு இடம்பெற மாட்டாது என்பதுடன், முப்படையினரின் பங்களிப்புடன் கலாசார நடனம் மாத்திரம் இடம்பெறவுள்ளது.

இன்றைய 9 ஆவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றம் கூடும் முதலாவது தினத்தில் உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாத நிலையில், அவர்கள் தாங்கள் விரும்பிய ஆசனத்தில் அமர முடியும்.

எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆசனங்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடாளுமன்ற பொதுமக்கள் கலரி, பொதுமக்கள் வருகைதருவதற்கு தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்மேற்கொள்வதை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாத்திரமே பொதுமக்கள் பகுதியில் இருந்து பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.