இலங்கையில் சமூகமட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 5 வயதான கொரோனா தொற்றிய சிறுமி

நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்து 4 பேருக்கும், லங்காபுர பிரதேச செயலயத்தில் கடமை செய்து கொரோனா தொற்றுக்குள்ளான  சிவில் பாதுகாப்பு அதிகாரியின் 5 வயதுடைய மகளுக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 828 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 3 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 517 பேர் குணமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் 300 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில்; சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.