நாவலப்பிட்டியில் கஞ்சாவுடன் 4 பேர் கைது...

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி நகர பகுதியில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு சந்தேக நபர்களை நாவலபிட்டி குற்றதடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவமானது நேற்று (18) மாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நாவலபிட்டி குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யபட்டதோடு கைது செய்யபட்டவர்களிடம் இருந்து ஒரு தொகை கஞ்சாவும் 34 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் மீட்கபட்டுள்ளதாக நாவலப்பிட்டி குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் நாவலபிட்டி பகுதியை சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் (19) நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி குற்றதடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.