2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஆரம்பம்...

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொது தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 

இவ்வாறு ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு இன்று மாலை 5 மணி வரை நடைபெறும். 

இந்நிலையில் பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மக்கள் அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் போது முகக்கவசங்கள் அணிந்து செல்ல வேண்டியது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் காலை வேளைகளில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தங்களுடைய வாக்குகளை அளிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்காக நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த முறை பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்களர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இன்றைய தினம் வாக்களிப்பு நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் நாளை 6 ஆம் திகதி காலை 8 மணி முதல் அந்தந்த மாவட்டங்களில் வாக்கெண்ணும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக 77 வாக்கெண்ணும் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியில் விசேட சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இந்த முறை பொது தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினமும் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம் பொது தேர்தலின் முதலாவது பெறுபேறாக மாத்தறை மாவட்டத்தின் பெறுபேறினை வெளியிட முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.