நடந்து முடிந்த 2020 பாராளுமன்ற தேர்தலின் 10 சுவாரஸ்யமான சம்பவங்கள்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் அடிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதன்படி ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைபொதுஜன பெரமுன சார்பில் (527,364)குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளார்.

அதேபோன்று ஈ பி டி பி சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட குலசிங்கம் திலீபன் 3203 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளார்.

அத்துடன் பொதுஜன பெரமுன சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச 81.1 வீத விருப்பு வாக்கையும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 78.9 வீத விருப்பு வாக்கையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை உயர்ந்த பட்சமாக விருப்பு வாக்குளை பெற்ற போதிலும் நாடாளுமன்றுக்கு தெரிவாகாத மூவர் தொடர்பான விபரங்களும் வெளியாகியுள்ளன.

இதன்படி பொதுஜன பெரமுன சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டலக்ஸ்மன் யாபா அபேவர்தன 71106 விருப்பு வாக்கை பெற்றபோதிலும் நாடாளுமன்றுக்கு தெரிவாகவில்லை.

அதேபோன்று பொதுஜன பெரமுன சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்ட டில்ஷான் விதானகமகே 56484 வாக்குகளை பெற்றபோதிலும் நாடாளுமன்றுக்கு தெரிவாகவில்லை.

களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட இப்திகார் ஜமீல் 54305 வாக்குகளை பெற்ற போதிலும் நாடாளுமன்றுக்கு தெரிவாகவில்லை

இதனிடையே இருவருக்கிடையில் குறைந்தளவு விருப்பு வாக்குகள் அடிப்படையில் நாடாளுமன்றுக்கு தெரிவாகாதவர்களின் விபரங்களும் வெளிவந்துள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட ரோகினி குமார விஜேரட்ன 27587 வாக்குகளை பெற்ற நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரஞ்சித் அலுவிகார 27171 வாக்குகளை பெற்று வெறும் 416 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.

அதேபோன்று வன்னியில் பொதுஜனபெரமுன சார்பில் போட்டியிட்ட காதர் மஸ்தான் 13454 வாக்குகளை பெற்ற நிலையில் ஜனக் நந்தகுமார 12999 வாக்குகளை பெற்று 455 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.

யாழ்ப்பாணத்திலும் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட சித்தார்த்தன் 23840 வாக்குகளை பெற்ற நிலையில் சசிகலா ரவிராஜ் 23098 வாககுகளை பெற்று 742 வாக்குகளால் நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.

கேகாலை மாவட்டத்தில் சுதத் மஞ்சுள 45970 வாக்குகளை பெற்ற நிலையில் சாந்த குணசேன 45255 வாக்குகளை பெற்று 715 வாக்குகளால் நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.