சற்று முன்னர் மேலும் 16 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2918 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2902 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 142 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2765 ஆக காணப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.