நேற்றைய தினம் 13 பேருக்கு கொவிட் தொற்று..

நாட்டில் நேற்றைய தினம் 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற 10 கைதிகளுக்கும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், கென்யாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட் -19 தொற்றுறுதியானது.

இதன்படி நாட்டில் இதுவரையில் கொவிட்- 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 984 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 3 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 153 ஆக உள்ளது.

இதேவேளை சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் ஊடுறுவக் கூடும் எனவும், அதன்மூலம் சமூகத்திற்கு கொவிட்-19 பரவும் அபாயம் நிலவுவதாகவும் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் சமூகத்தில் மேற்கொள்ளப்படும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மூலம் எவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.