சற்று முன்னர் மேலும் 10 பேருக்கு கொரோனா..!

கொவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2981 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 10 பேரும் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2971 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2819 ஆக காணப்படுகின்றது.

அதேபோல், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 150 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் பலியானதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.