இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து...! 05 பேர் பலி

கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் - வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மகிழூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

வலக்கும்புர பகுதியில் மரண வீடொன்று சென்று மீள குருநாகல் நோக்கி பயணித்த மகிழூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்தவர்கனே உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த 05 பேரும் கட்டுமான நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்கள் என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.