பாடசாலை மாணவர்களுக்கான விசேட செய்தி... பாடசாலைகளின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் இன்று..!

பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானத்தை இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த இதனை தெரிவித்துள்ளார்.

கற்றல் செயற்பாடுகiளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு வினவியிருந்தது.

இதற்கு உரிய பதில் கிடைக்க பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2019 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்கும் காலம் ஜுலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.