கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்...!

நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

சேனபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 17 கைதிகளுக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 15 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், 673 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.