கொரோனா தொற்றுறுதியாகி முல்லேரியா ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்றவரை இராணுவத்தினர் பொறுப்பேற்று மீண்டும் ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இராணுவ பேச்சாளர் பிர்கேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு கடுமையான முறையில் அடிமையாகியிருந்த நிலையில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகத்திற்குரியவர் இன்று அதிகாலை ஐ.டி.எச் மருத்துவமனையி;ல் தப்பிச்சென்றிருந்தார்.
அவரை தேடி இராணுவ மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் அவர் இன்று முற்பகல் கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுக்கு அருகில் பிரவேசித்திருந்தார்.
இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கு அமைய அவரை இராணுவத்தினர் பொறுப்பேற்று ஐ.டி.எச் மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
Post a Comment