நேற்றிரவு ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு

கொரோனா தொற்று சர்வதேச ரீதியில் முழுமையாக இல்லாதொழியும் வரை கலைஞர்கள் காத்திருக்காது நாட்டின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்க உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சினிமா மற்றும் நாடகத்துறை கலைஞர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பிரசார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள, நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் புகைப்படங்களை பயன்படுத்துவதாகவும், இராணுவம் மற்றும் அரச அதிகாரிகளை தொடர்பு படுத்திக் கொள்வதாகவும் பல்வேறு நியமனங்களை பெற்றுத் தருவதாக குறிப்பிடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அனைத்து ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய துறைத் தலைவர்களுக்கு, ஜனாதிபதி செயலாளரினால் நேற்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரதியொன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.