கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் தொடர்பில் வெளியான செய்தி

நாட்டில் இன்றையதினம் புதன்கிழமை மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில், அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை மற்றும் இரணவில வைத்தியசாலையிலிருந்து தலா இருவரும்,ஒருவர் மினுவங்கொடை இராணுவ வைத்தியசாலையிலிருந்தும் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,012 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 2,687 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 664 பேர் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 99 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.