தப்பிச் சென்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டார்

அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளரை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் மற்றும் இராணுவ குழுக்கள் நியமிக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்ற நிலையிலேயே குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

போதைக்கு அடிமையாகிய நிலையில் அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த கொரோனா தொற்றுடைய நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக இன்றுகாலை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கண்டுப்பிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியிருந்த நிலையில் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

போதைக்கு அடிமையாகிய நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த கைதியொருவரே இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

திருகோணமலை சீனன்குடா, மாபிள் பீச் ரோட்டைச் சேர்ந்த முகமட் ஹசிம் முகமட் நசீம் என்பவரே அங்கொட வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.