பிரபலங்கள் இருவரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்....

பாணந்துறை - ஹொரேதுடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தமையை அடுத்து கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் பயணித்த வாகனம் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை - ஹொரேதுடுவ பகுதியின் இன்று அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை காவல் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.