நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

மடகஸ்காரில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கும், மாலைதீவில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறதியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 863 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 195 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொட்டாஞ்சேனை - ஜிந்துப்பிட்டி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து. கடந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட 154 பேரில், 50 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அவர்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோள் மண்டல காட்சிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

சமூக இடைவெளியை பேணுவதற்காக அனைத்து காட்சிகளிலும், வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களை மாத்திரமே பங்குகொள்ளச் செய்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.