நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள்..!

நாட்டில் நேற்றைய தினம் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அவர்களில் ஓமானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேரும், கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய ராஜாங்கனை மற்றும் லங்காபுர பகுதிகளை சேர்ந்த 2 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொவிட்19 தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய கண்டி - குண்டசாலையை சேர்ந்த 2 பேருக்கும் கொவிட் - 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம், சேனபுர புனர்வாழ்வு மையத்தினை சேர்ந்த 4 பேருக்கும் நேற்று கொரோனா தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுதியானவர்களுடன் தொடர்பை பேணிய மேலும் ஐந்து பேருக்கும் நேற்று மாலை கொரோனா தொற்றுறுதியானது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் 666 பேர் தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கொவிட் - 19 தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1988 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.