பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் நேரம் அறிவிப்பு - மாணவர்களுக்கான முக்கிய தகவல்...!

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி முதல் தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட உள்ளன.

கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரை நடைபெறவுள்ளன.

ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதரத்துறையினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொது தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் ஜூலை மாதம் 28 ,29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டுமென கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த காலப் பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.