மின்சார பாவனையாளர்களுக்கு ஓர் நற்செய்தி

மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைகளை முன்வைக்க 4 பேர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் அறிக்கை அடுத்த வாரம் முன்வைக்கப்பட உள்ளதாக விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக வழங்கப்பட்ட மின்சார கட்டணப் பட்டியல் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு காண்பதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் அந்தக் குழுவின் தலைவராக செயற்பட உள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.