கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான மகிழ்ச்சிகர செய்தி

இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவரகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்றைய தினம் மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 2001 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 2,665 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 653 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.