தபால்மூல வாக்களிப்பிற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் முதற்கட்ட பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கான தபால்மூல வாக்குப்பதிவுகள் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.

குறித்த வாக்குப்பதிவுகள் இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்பிற்காக இம்முறை 7 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறும் அதேவேளை எதிர்வரும் 16,17 மற்றும் 20, 21 ஆகிய திகதிகளிலும் தபால்மூல வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.


இதன்போது சமூக தூரத்தை பராமரித்தல், முகக்கவசங்கள் அணிவது, கைகளை சவர்க்காரம்/தொற்று நீக்கி பயன்படுத்துதல் போன்ற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்கும் போது சின்னத்தை அடையாளப்படுத்துவதற்காக கருப்பு அல்லது நீல நிற பேனைகளை எடுத்து வருமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.