கொரோனா தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் 19 தொற்றுறுதியானவர் சென்ற இடங்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் புலனாய்வு பிரிவினால் கண்டறியப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்

இதற்கமைய அந்த இடங்களுக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா வைரஸ் தொற்றுறுதியான நோயாளி ஒருவர் நேற்று முன்தினம் அந்த வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனார்.

பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அவர்களில் நான்கு பேர் இந்தியாவின் சென்னையில் இருந்தும், மேலும் இருவர் பெலருஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 9 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.