கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய மத்திய மாகாண 9 ரானுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண வைத்திய பணிப்பாளர் அர்ஜுன திலகரத்ன குறிப்பிட்டார்.
மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் கண்டி மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கண்டி மாவட்டத்தில் பாததும்பர, மெனிக்கின்ன , குண்டசால, பம்பரதெனிய, கம்பளை, ஹசலக ஆகிய பகுதிகளை சேர்ந்த ரானுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண வைத்திய பணிப்பாளர் அர்ஜுன திலகரத்ன குறிப்பிட்டார்.
கடந்த 2 ம் திகதி முதல் 10 திகதி வரை குறித்த ரானுவ வீரர்கள் விடுமுறையில் வந்துள்ள நிலையில் அவர்கள் அவர்களது சொந்த ஊர்களில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புபட்ட 300 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
கண்டி மாவட்ட மக்கள் மிக அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment