சற்றுமுன்னர் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,459 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 468 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, 1980 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து வௌியில் தொற்று பரவாதிருக்கத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்தும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பு தொடந்தும் தேவைப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.