கம்பளை பம்பரதெனிய பிரதேசத்தில் இரண்டு வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவை செய்த ஆலோசகரின் மகளுக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் குழந்தையின் தாய் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி ஆலோசகருக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து அவரது குடும்பத்தில் 8 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கமைய குறித்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இதுவரையில் மத்திய மாகாணத்தில் முழுமையாக 10 கொரோனாா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment