16 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள்- சற்றுமுன்னர் வெளியான செய்தி

கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தை அண்மித்த பகுதியில் தொற்றுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்து நாட்டில் இதுவரை 16 மாவட்டங்களில் கொவிட் 16 தொற்றுதியானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை, புத்தளம், யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய 16 மாவட்டங்களிலேயே இவ்வாறு கொவிட் 19 தொற்றுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு மையத்தை அண்மித்த பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை இடம்பெற்றுவருதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ராஜாங்கனை பகுதியில் கொரேனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளவர்களை தேடி தொடர்ந்துத் பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் நிறைவடைந்த 365 பேர் 6 தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து இன்று வெளியேறவுள்ளனர்.

இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

பூசா தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 21 பேரும், தியத்தலாவ மத்திய நிலையத்திலிருந்;து 137 பேரும் இவ்வாறு வீடு திரும்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கற்பிட்டி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 8 பேரும், புனானை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 149 பேரும் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட் 19 தொற்றுறுதியான மேலும் ஒரு கடற்படை உறுப்பினர் குணமடைந்துள்ளார்.

இதற்கமைய குணமடைந்துள்ள கடற்படை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 899 ஆக உயர்ந்துள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 7 கடற்படை உறுப்பினர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.