பாடசாலை மாணவர்களுக்காக கல்வி அமைச்சினால் மற்றுமோர் சலுகை...!

சுரக்ஷா காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளும் சுகாதார பாதுகாப்புகளை உறுதிபடுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உருவாக்கப்பட்ட சுரக்ஷா காப்பீட்டு வேலைதிட்டத்தின் கீழ் 2020 மே மாதம் 31 ஆம் திகதி முதல் காப்பீட்டு நன்மைகளை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் வழங்கவுள்ளது.

இதற்கமைய, காப்பீட்டு நன்மைகள் தொடர்பிலான விண்ணபத்தினை பிழையின்றி பூர்த்தி செய்து இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைமை காரியாலயத்திற்கு அல்லது நாடளாவிய ரீதியில் காணப்படும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் கிளைக்காரியாலயங்களில் கையளிக்கவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கமுடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் 0112357357 எனற இலக்கத்திற்கு அல்லது சுரக்ஷா சேவை தொடர்பில் 0112319015 - 0112319016 மற்றும் 0112319017 ஆகிய இலக்கங்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்திகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.