இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 4 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர்களில் இருவர் கடற்படை சிப்பாய்களாவர்.

ஏனைய இருவரும் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய நிலையில், ரன்தம்பை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நேற்றைய தினம் 19 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்திருந்தனர்.

இதன்படி, நாட்டில் கொரோனோ தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 858 ஆக அதிகரித்துள்ளது.

931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.