தேர்தல் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...!

ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொது தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று காலை இடம்பெற்ற பொது தேர்தல் தொடர்பில் தெளிவூட்டும் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தேர்தல் வாக்கு எண்ணும் பணிகளை, வாக்களித்த தினத்திற்கு மறு தினம் முன்னெடுப்பதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு முன்னர் அனைத்து தேர்தல் முடிவுகளையும் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

பொது தேர்தலின் உத்தியோகபூர்வ வாக்களர் அட்டை அடுத்த மாதம் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் உத்தியோகபூர்வ வாக்களர் அட்டையை அடுத்த மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.