நாடளாவிய ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் நேற்றும் இன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட உள்ளது.

அத்துடன், நாளை முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு, தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் 498 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலகட்டம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 70 ஆயிரத்து 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 19 ஆயிரத்து 856 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுள் 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 10 ஆயிரத்து 892 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.