பொதுத்தேர்தல் தொடர்பில் சற்று முன்னர் வெளியான முக்கிய செய்தி.

தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து எதிர்வரும்8 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, அவர் மேலும் கூறுகையில், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட தேர்தல் நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் தேர்தல் தினம் தீர்மானிக்கப்படும் என்றார்.

அத்துடன், தேர்தலை நடத்தும்போது பின்பற்றவேண்டிய சுகாதார வழிகாட்டல் இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவினால் தமது ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.