நாட்டில் கொரோனா தொற்று - மற்றுமொரு மகிழ்ச்சி செய்தி இதோ!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 49 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 990 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 1835 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 834 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 34 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 552 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.