கருணா அம்மான் மீது மற்றும் ஓர் புதிய குற்றச்சாட்டு..

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த காலப்பகுதியில் அவரால் நடாத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் பதிவிடப்பட்டுள்ளது.

அத்துடன் விநாயக மூர்த்தி முரளிதரனால் சிறுவர்களை படையில் இணைத்து கொண்டமை உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு அமைய குற்றச்செயலாக கருதப்படும் குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.