2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று (21) நிகழவுள்ளது.
இலங்கை மக்களுக்கு அரைச் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9.15 மணி முதல் மணி வரை 6 மணித்தியாலங்களுக்கு சூரிய கிரகணம் நீடிக்கவுள்ளது.
இன்று காலை 10.20 மணியளவில் அரை சூரிய கிரகணத்தை கொழும்பு நகரில் காண முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், காலை 10.24 மணியளவில் யாழ்ப்பாணத்திலும் காலை 10.34 மணியளவில் மாத்தறையிலும் அரைச் சூரியக்கிரகணத்தை அவதானிக்க முடியும்.
இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களால் அவதானிக்க வேண்டாமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment