சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா - தலைநகர் பீஜிங்கில் ஊரடங்கு

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், தலைநகர் பீஜிங்கில் 2 பேர் உள்பட அந்த நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

முடிவுக்கு வந்துவிட்டது கொரோனா என கருதப்பட்டு வந்த நிலையில், புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

56 நாட்களுக்கு பிறகு, தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த பீஜிங்கில் அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீன தலைநகரில் உள்நாட்டில் பரவிய மேலும் ஆறு கொரோனா பாதிப்புகளை தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து பீஜிங்கில் உள்ள அதிகாரிகள் நகரத்தில் உள்ள பெரிய மொத்த சந்தையை தற்காலிகமாக மூடினர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.