நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் கொரோனா தொற்றுறுதியான 22 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 856 பேர் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 22 கொரோனா தொற்றுறுதியானவர்களில் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 8 பேரும், சென்னையில் இருந்து நாடு திரும்பிய நான்கு பேரும் கடற்படையை சேர்ந்த 10 பேரும் அடங்குகின்றனர்.

அதேநேரம், நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்த மேலும் 49 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 990 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.