மற்றுமொரு பிரபல அரசியல்வாதியின் அதிரடி தீர்மானம்..!

பொது தேர்தலில் களமிறங்குவது இதுவே இறுதி சந்தர்ப்பமாக அமையும் என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நவின் திசாநாயக்க தெரிவித்தார்.

கினிகத்ஹேன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தாம் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ள போதிலும், ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் தொடர்ந்தும் பங்களிப்பு செலுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் பல தலைவர்களை உருவாக்கிய ஐக்கிய தேசிய கட்சிக்குள் மேலும் பல சக்திவாய்ந்த தலைவர்கள் காணப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிளவடைந்து சென்றவர்கள் எந்வொரு கொள்கைகளையும் கொண்டவர்கள் அல்ல என்பதோடு, நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கே முனைகின்றனர். ஆனால் அதனை அவர்களால் என்றும் பெற்றுக்கொள்ள முடியாது என நவின் திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

அவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் அணிக்கு வலுசேர்க்கவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என நவின் திசாநாயக் மேலும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.