நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள்..

நாட்டில் நேற்றைய தினம் 10 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியது.
அவர்களில் 8 பேர் கடற்படையினராவர்.

அவர்களில் 7 பேர் கிளிநொச்சி - இயக்கச்சி தனிமைப்படுத்தல் மையத்திலும், ஒருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இருவரில் ஒருவர் கட்டாரிலிருந்தும், ஒருவர் மும்பையிலிருந்தும் நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மும்பையிலிருந்தும் மற்றுமொருவர் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 65 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

736 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.