கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி


பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்புவதற்கான கால எல்லை எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் அதற்கான உரிய அறிவுறுத்தல்கள் அடங்கிய கையேடு ஆகியன கல்வி அமைச்சு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய விண்ணப்பங்களை, கல்வி அமைச்சின் இணையத் தளத்தில் தரவிறக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தின் அடிப்படையில், இருப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணமாக, கடந்த 5 வருடத்துக்கான வாக்காளர் பதிவேடு குறித்த விபரங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக, விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான தகவல்களை கிராம உத்தியோகத்தரிடம் அல்லது தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய தகவல்களைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.