தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

அரச நிறுவனத்தின் தலைவர் ஒருவருக்கோ, பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவருக்கோ அல்லது வேறு அதிகாரி ஒருவருக்கோ ஏதாவது கட்சி ஒன்றுக்கு ஆதரவாக அரசியலில் ஈடுபட வேண்டியிருந்தால் சட்டபூர்வமாக தனது பதவியில் இருந்து விலகி அவ்வாறு செயற்பட முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவன தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்திற்காக அரசியல் செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஒருபோதும் எதிர்ப்பார்க்கவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் பொறுப்பேற்ற நிறுவனத்தை திறமையான, ஊழல் இல்லாத, பயனுள்ள, ஒழுக்கமான மற்றும் லாபம் ஈட்டும் நிறுவனமாக மேம்படுத்துவதே அவர்களின் செயற்பாடாகும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.