கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 7 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்ததையடுத்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மையில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை விநாயகமூர்த்தி முரளிதரன் முன்னிலையாகியிருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்கள் தவறான அர்தம் கற்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தினைப் பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. எமது அரசாங்கத்தினது வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளே இவை.
எனவே நாம் இவை அனைத்தையும் முறியடித்து வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment